எஸ். டி. பி. ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
எஸ். டி. பி. ஐ. கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கேயம் ரோடு, சி. டி. சி. கார்னர் அருகே மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்றத்தில் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யப்பட்டது. அதை கண்டிக்கும் விதமாக வக்ஃப் திருத்த சட்டத்தை நிராகரிப்பு, வக்ஃப் திருத்த சட்டத்தை ஏற்க மாட்டோம். , மேலும் பள்ளிவாசல், கபர்ஸ்தான் விட்டுத்தர மாட்டோம். என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வர்த்தக அணி மாவட்ட தலைவர் முபாரக் பாஷா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: - வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். வக்ஃப் திருத்த சட்டம் என்பது இஸ்லாமியர்களுடைய வக்ஃப் சொத்துக்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டது. அது ஏழைப் நன்மை பெறக்கூடிய சொத்துக்கள் இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும். பொதுமக்களுக்காக பயன்பெற வேண்டும். என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். அப்போது உடன் மாவட்ட செயலாளர் இதயத்துல்லா, மாவட்ட பொருளாளர் ஜாபீர் அகமது, IT WNG மாவட்ட தலைவர் யாசின், மாவட்ட செயலாளர் அக்பர் அலி உள்பட 50 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி