மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலுத்தாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். இதனிடேயே அப்பெண் உயிரிழந்துள்ளார். தனிஷா என்ற 7 மாத கர்ப்பிணி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, ரூ.2.5 லட்சம் பணம் செலுத்தியும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனிஷா உயிரிழந்துள்ளார். இவர் பாஜக நிர்வாகிக்கு பிஏ-வாக இருப்பவரது மனைவி எனப்படுகிறது.