60 கிலோ அழுகிய தர்ப்பூசணி பழங்கள் அழிப்பு

82பார்த்தது
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜ யலலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் ஆறுச்சாமி, பாலமுருகன் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சி பகு திகளில் உள்ள தர்பூசணி பழங்கள் விற்கும் 10 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது தர்பூசணி பழங்களில் செயற்கை சாயம் ஏற் றப்பட்டுள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர். சிறிய பஞ்சை எடுத்து தர்பூசணி பழங்களை வெட்டி தொட்டு எடுக் கப்பட்டது. சாயம் ஏற்றப்பட்டிருந்தால் அந்த பஞ்சில் சாயம் ஒட்டிவிடும்.

மேலும் தர்பூசணி பழ துண்டுகளை ஒரு தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரில் போடும்போது அதில் செயற்கை சாயம் இருந்தால் அந்த நிறமிகள் தனியாக பிரிந்து தண்ணீர் நிறம் மாறி இருக்கும்.

இந்த ஆய்வில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட தர்பூசணி பழங் கள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆய்வின்போது ஒரு கடையில் அழுகிய நிலையில் கெட்டுப்போன தர்பூசணி பழங்கள் 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கடைக்காரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி