திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர், முருகேசன்(55), இவரது மகன் அரவிந்தன் (25), நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டின் அருகில் இருந்த மளிகை கடை பூட்டை உடைக்க சில வாலிபர்கள் முயற்சித்துள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அரவிந்தன் இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தது மட்டுமின்றி பூட்டை உடைத்தவர்களை வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், வீடியோ எடுத்து தங்களை மாட்டி விட்ட அரவிந்தன் மீது கோபத்தில் இருந்த வாலிபர்கள் நேற்று மாலை, அரவிந்தன் வீட்டிற்கு வந்து சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனர் தடுக்க வந்த அவரது தந்தையையும் வெட்டியுள்ளனர் இதில் அரவிந்தனுக்கு 9 இடங்களில் வெட்டுக்காயமும் அவரது தந்தை முருகேசனுக்கு இரண்டு இடங்களில் விட்டு காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.