திருப்பூர் - Tirupur

திருப்பூர்: காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் திறந்து வைத்த போலீஸ் துணை கமிஷனர்

திருப்பூர்: காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் திறந்து வைத்த போலீஸ் துணை கமிஷனர்

திருப்பூர் 10-வது வார்டு ஆத்துப்பாளையத்தில் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம் சார்பில் காவல் சிறுவர்-சிறுமியர் மன்றம் ரூ. 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்க தலைவர் உமாகாந்த் தலைமை தாங்கினார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் ஆனந்தகுமார், 10-வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா கோட்டாபாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், சமுதாய சேவை திட்ட சேர்மன் அப்துல் கரீம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.  இதில் திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா, ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, கொங்குநகர் சரக ரக போலீஸ் உதவி கமிஷனர் வசந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதில் ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், 15 வேலம்பாளையம் போலீசார், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా