ChatGPT-ன் புகைப்படத்தை உருவாக்கும் அம்சத்தை கொண்டு போலி ஆதார் அட்டைகளை உருவாக்க முடியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த போலி ஆதார் படங்களை உருவாக்க, ஆதார் புகைப்பட தரவை ChatGPT எங்கிருந்து பெற்றது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்புகள், மோசடிகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒருசிலர், ஆதார் அட்டை உருவாக்கத்திற்கான கோரிக்கையை ChatGPT நிராகரித்ததாக கூறுகின்றனர்.