திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தொ. மு. ச. ஈ. பி. அ. சரவணன் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிவிலுக்கு வருகிற வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் கொதிப்படைந்துள்ளனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் பல மடங்கு கட்டணம் உரிய ரசீதுகள் இன்றி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயிலுக்கு வருகிற வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து ரசீதில் வரிசை எண், ஒப்பந்ததாரர் பெயர், தேதி, முகவரி, கையொப்பம் உள்ளிட்ட முழு விபரங்களுடன் கட்டணம் வசூலிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.