மனு கொடுக்க வந்தபோது கலெக்டர் அலுவலகத்தில் பெண் மயக்கம்

73பார்த்தது
மனு கொடுக்க வந்தபோது கலெக்டர் அலுவலகத்தில் பெண் மயக்கம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் கிறிஸ்து ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத் தில் வீடு கேட்டு மனு கொடுக்க கே. ஆண்டிபாளையத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி சரஸ்வதி வந்தார். இவர் கலெக்டரி டம் மனு கொடுப்பதற்காக கூட்ட அரங்கிற்குள் சென்றபோது திடீரென மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி வைத்தனர். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இத னால் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி