திருப்பூர்: பட்டாசு உற்பத்தி நடப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

51பார்த்தது
திருப்பூர்: பட்டாசு உற்பத்தி நடப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: - அரசு அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்று வரும் பட்டாசு உற்பத்தி பணிகளானது பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்ட வளாகங்களில் மட்டுமே நடைபெற வேண்டும்.

பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்ட வளாகங்கள் தவிர்த்து பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டாசு உற்பத்தி செய்ய அனுமதி பெறப்பட்ட இடங்கள் தவிர குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு உற்பத்தி செய் வதை பொதுமக்கள் கண்டறிந்தால், இலவச தொலைபேசி எண்ணான 1077-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற பட்டாசு இருப்பு வைக்கும் மற்றும் விற்பனை செய்யும் கடைகள், குடோன்களின் உரிமையார்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் தவறாது கடைபிடித்து பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி