சொத்துவரி ஆறு சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டித்தும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள இந்த சொத்து வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அதிமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமாரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறக்கப்பட்ட கட்டிடம் என திட்ட விவரங்கள் அடங்கிய கல்வெட்டு பதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வர்ணம் பூசும் பணிக்காக இந்த கல்வெட்டை நீக்கி வைத்திருக்கின்றனர். இந்த வர்ணம் பூசும் பணி நிறைவடைந்ததும் மீண்டும் அந்த கல்வெட்டை அதே இடத்தில் பதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் எம்எல்ஏக்கள் உடன் சென்று மனு அளித்தார்.