திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்த நபர்களிடமிருந்து மீட்டுத் தருமாறு முதியவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த இவர், தந்தை காலத்தில் இருந்து சுமார் 80 ஆண்டுகளாக எலைய முத்தூர் பகுதியில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆவணங்கள் ஏதும் இல்லாத நிலையில் 80 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில் அருகிலுள்ள நிலத்தைச் சேர்ந்த மானுப்பட்டி சாயப்பட்டறை கிட்டுசாமி, அரவிந்த், மயில்சாமி உள்ளிட்ட சிலர் சேர்ந்து தங்கள் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் கிரயம் செய்து உள்ளதாகவும் அந்த கிரயத்தை ரத்து செய்து தங்களின் மகன் பெயரில் நிலத்தை வழங்க வேண்டும் என முதியவர் சுந்தர்ராஜ் அவரது மனைவி மகனுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.