திருப்பூர்: சிட்கோ காலி தொழில்மனைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்

85பார்த்தது
திருப்பூர்: சிட்கோ காலி தொழில்மனைகள் வாங்க விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: - காங்கயம் தாலுகா ராசாத்தவலசு கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்பேட்டையில் 7 காலி தொழில்மனைகள் ஒதுக்கீட்டிற்கு தயாராக உள்ளது. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோர் https: //www. tansidco. tn. gov. in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழ்நாடு சிட்கோவிற்கு சொந்தமாக அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் உள்ள காலி மனைகள் விவரங்களை இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு சிட்கோ கிளை அலுவலகம், குறிச்சி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், குறிச்சி, கோவை-641 021 என்ற முகவரியிலும், 9445006572 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி