தமிழக அரசு ஈஷா யோகா மையத்திற்கு தொந்தரவு அளிப்பதாக பாஜக மாநில பொதுச்ச்செயலாளர் ஏ. பி முருகானந்தம் திருப்பூரில் குற்றம் சாட்டினார்
திருப்பூர் குமரனின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் செய்தியாளர்களை சந்திந்தார் அப்போது அவர் உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டது ஓர் விளையாட்டுச் செய்தி என்றும் அவர் அறிவித்த பிறகு தமிழகத்தில் பாலாறும் தேனருமா ஓடுகிறது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதாக குற்றம் சாட்டினார் மேலும் அவர் ஈஷா யோக மையத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாகவும் உலக அளவில் யோகாவை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுவது ஈஷா யோக மையம் , இந்நிலையில் ஈஷா யோக மையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்தார்