திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பங்கேற்று மகிழ்ந்த மாணவிகள். டிரெண்டிங் டிஜே பாடல்களுக்கு ‘வைப்’ ஆகி நடனமாடி அசத்திய முன்னாள் மாணவிகள்.
திருப்பூர் - மங்கலம் சாலை, குமரன் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மாணவிகள் சங்க குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பேரவை பொறுப்பு மாணவியர்கள் என ஏராளமானோர் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உபயோகப்படக்கூடிய வகையிலான 30 ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை முன்னாள் மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். முன்னாள் மாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களுடைய கல்லூரி பயின்ற ஞாபகங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து டிரெண்டிங் டிஜே பாடல்களுக்கு மாணவிகள் குழுவாக நடனமாடி ‘வைப்’ ஆகினர். 2005ம் ஆண்டிருலிருந்து குமரன் கல்லூரியில் பயின்ற மாணவிகள் பங்கேற்றனர்.