திருப்பூரில் புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகம் திறப்பு

63பார்த்தது
திருப்பூர் மாநகர காவல் ஆணையரகம் கடந்த 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறைக்கு கீழ் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 17 ஸ்டேஷன்கள் உள்ளன. மாநகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் 2. 24 ஏக்கரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் 5 தளங்களுடன் குமார் நகர் பகுதியில் கட்டப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக புதிய மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தனர்
இதேபோல் 1. 90 கோடி மதிப்பீட்டில் பல வஞ்சிபாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு 7000 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட வீரபாண்டி காவல் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி