திருப்பூரில் உள்ள பிரபல மதுரை ஜிகர்தண்டா கடையில் ஜிகர்தண்டாவில் கம்பி இருந்ததால் 50 கிலோ ஜிகர்தண்டா வை கீழே ஊற்றி அளித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!!
திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி மற்றும் முரளி இருவரும் அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை ஜிகர்தண்டா கடையில் ஜிகர்தண்டா அருந்திய போது அதனுள் கம்பி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடை ஊழியரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் அளித்ததை தொடந்து பாதிக்கப்பட்டவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மதுரை ஜிகர்தண்டா கடையில் சோதனை நடத்தியதோடு. , கடையில் இருந்த 50 லிட்டர் மதிப்பிலான ஜிகர்தண்டாவை கீழே ஊற்றி அளித்தோடு சுகாதாரமாக இல்லாத காரணத்திற்காக பிரபல மதுரை ஜிகர்தண்டா கடைக்கு அபராதம் விதித்தார்.
திருப்பூரில் பிரபல மதுரை ஜிகர்தண்டா கடையில் ஜிகிர்தண்டாவில் கம்பியிருந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது