நகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம் என்று தெரிந்தும்கூட அந்த பழக்கத்தை பலரால் விட முடிவதில்லை. இதிலிருந்து விடுபட நகங்களை அவ்வப்போது வெட்டி, கடிக்க முடியாத அளவுக்கு சிறியதாக, அழுக்கு சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.