திருப்பூரில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பேப்பர் படகுகளை விட்டு உற்சாகம். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி. வடிகால் வசதி முறையாக ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் கனமழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் சாலைகளில் ஓடிய மழை நீரில் காகிதத்தில் படகு வடிவமைத்து விட்டு உற்சாகமடைந்தனர் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழை காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஓம் சக்தி கோவில் வீதி, பிச்சம்பாளையம், மிஷன் வீதி, தென்னம் பாளையம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் தாழ்வான பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் பணியை முறையாக செய்து சாலைகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.