அரியலூரில் ஏன் அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும்? என்ற தலைப்பில் தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாதகவில் இருந்து அண்மையில் விலகிய காளியம்மாள் கலந்து கொண்டார். பின்னர் அவரிடம் தவெக நிர்வாகிகள் தங்கள் கட்சி துண்டை தோளில் போட்டவாறு செல்பி எடுக்க முயன்றனர். அதற்கு காளியம்மாள், "கட்சி துண்டுடன் போட்டோ எடுத்தால் ஒருமாதிரி ஆகிவிடும்" என கூறினார்.