திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கவரப்பட்டியில் விவசாயி தூக்கிட்ட நிலையில் புளிய மரத்தில் சடலமாக தொங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கவரப்பட்டியைச் சேர்ந்தவர் 58 வயதான விவசாயி கணேசன் இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் சடலமாக தூக்கிட்டு நிலையில் தொங்கியவாறு காணப்பட்டார். இதனை அப்பகுதி வழியே சென்றவர்கள் பார்த்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் விவசாயி கணேசன் சடலத்தை கீழே இறக்கி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன விவசாயி கணேசனுக்கு மனைவி, ஒரு மகன் , இரு மகள்கள் உள்ளனர். மேலும் போலீசார் கணேசன் ஏதேனும் பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை கொலை செய்து யாரேனும் மரத்தில் தொங்க விட்டனரா? என பல்வேறு கோணத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயி மர்மமான முறையில் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.