திருச்சியில் மத்திய மந்திரிக்கு எதிராக போராட்டம்

84பார்த்தது
தமிழ்நாட்டு மக்களை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிராதனை கண்டித்து திருச்சியில் தெற்கு மாவட்ட திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி கழக நிர்வாகி அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது தமிழ்நாடு மக்கள் குறித்து இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசையும் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். தர்மேந்திர பிரதானி புகைப்படத்தை கிழித்து எரிந்தனர்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி