போதையில் சிகரெட் புகைத்தவாறு படுத்தவர் பலி

77பார்த்தது
போதையில் சிகரெட் புகைத்தவாறு படுத்தவர் பலி
சென்னை சாலிகிராமத்தில் சிகரெட் தீப்பொறி பட்டு படுக்கையில் தீப்பற்றி மதுபோதையில் இருந்த மென்பொருள் நிறுவன ஊழியர் மூச்சுத்திணறி பலியானார். அவரின் அறையிலிருந்து அதிகாலை 3 மணியளவில் கரும்புகை எழுந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். மது அருந்திவிட்டு, சிகரெட் புகைத்தவாறு அப்படியே உறங்கிய நேதாஜி, தீப்பற்றியதும் போதை மயக்கம் காரணமாக எழ முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி