முசிறி அருகே உள்ள தா. பேட்டையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திருவுருவப்படத்தை எரித்த திமுகவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார். முசிறி அருகே உள்ள தா. பேட்டையில் நேற்று திமுகவினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களது திருவுருவப்படத்தை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அமைச்சரின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் பாஜகவினர் தா. பேட்டை காவல் நிலையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர்.