பட்டா வழங்குவது தொடர்பான நிலையான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலில், கோயில் வகைப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளது. அந்த நிலங்களை பொறுத்தவரையில் கோயில் பெயரில் முறையாகப் பட்டா பெற்றுள்ளனர். அதைச் சிலர் நீண்ட காலமாக ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதோடு பட்டா பெற முயன்று வருகின்றனர். இது தொடர்பான பல வழக்குகள் கோர்ட்களில் நிலுவையில் உள்ளது.