உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் மரத்தின்கீழ் நின்ற ஓய்வு பெற்ற காவலர் உள்பட இருவர் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காக புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மழை பெய்யும்போது மரத்தின் கீழ் நிற்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.