“தமிழை விட சமஸ்கிருதமே பழமையான மொழி என மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு கோயில்களிலும் சமஸ்கிருத மொழியில்தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. சட்டமன்ற தேர்தல் பயத்தில் மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்க்கிறது" என அவர் கூறியுள்ளார். மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை பார்த்து ‘அநாகரீகமானவர்கள்’ என கூறிய துகுறிப்பிடத்தக்கது.