காற்று மாசுபாடு உலகையே அச்சுறுத்தி வருகிறது. காற்று மாசுபாட்டால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய்கள், ஆஸ்துமா போன்ற அபாயகரமான நோய்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் 13 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இதில் முல்லன்பூர், ஃபரிதாபாத், டெல்லி போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்கள் உள்ளன. இதன் விளைவாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5.2 ஆண்டுகள் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.