தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீன் விலை குறைந்து காணப்படும். ஆனால், நேற்று (ஜனவரி 11) விலை பெரியளவில் குறையவில்லை. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமை கரைதிரும்பினர். இதனால், திரேஸ்புரம் ஏலக்கூடத்தில் மீன்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
மீன்கள் வாங்குவதற்காக கேரள வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. விலை ஓரளவு உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் கிலோ ரூ.800, விளைமீன், பாறை, ஊளி ஆகியவை ரூ.500 - ரூ.600 வரை, நண்டு கிலோ ரூ.500, சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 - ரூ.2,000 வரை விற்பனையாயின. மீன்வரத்து அதிகரித்தாலும், ஓரளவு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.