தூத்துக்குடி: தனியார் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: மூன்று பேர் காயம்

560பார்த்தது
தூத்துக்குடி அருகே தருவைகுளம் மேலமருதூர் பகுதியில் மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் என்ற தனியார் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை பணி நடந்து கொண்டிருந்தபோது நிலக்கரி அரைத்து மின்சார உற்பத்தி செய்வதற்காக கொண்டு செல்லும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் பணியில் இருந்த எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகனி, கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு, தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ் ஆகிய 3 தொழிலாளிகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனல் நிலைய ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி