2026 தேர்தல் பணிகள் மற்றும் கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நாளை (பிப்.26) விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாமாண்டு தொடக்க விழாவில் 2500 முதல் 3000 நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தவெக-வின் 2-ம் ஆண்டு துவக்க விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ள நிலையில், அவரும் மேடையில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.