
தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் கண்கள் தானம்
தூத்துக்குடியைச் சேர்ந்த செண்பகராஜ் (42) என்பவர் விபத்தில் காயம் அடைந்து கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து உறவினர்களின் ஒப்புதலுடன் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் அரசு மரியாதைக்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.