தூத்துக்குடி அனுமன் ஜெயந்தி முன்னிட்டு வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் அனுமனுக்கு வெத்திலை மற்றும் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இன்று அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாக அனுமன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ள அனுமன் சன்னதியில் அனுமனுக்கு வெத்திலை மற்றும் வடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் அனுமனை வழிபட்டு சென்றனர்.