தூத்துக்குடி: 139.80 மில்லி மீட்டர் மழை பதிவு

77பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 18) மாலை மற்றும் இரவில் பணி காரணமாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில் பரவலாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 21 மில்லிமீட்டர் மழையும், கோவில்பட்டியில் 20 மில்லிமீட்டர் மழையும், கயத்தாரில் 18 மில்லிமீட்டர் மழையும், கழுகுமலை மற்றும் ஓட்டப்பிடாரத்தில் 16 மில்லிமீட்டர் மழையும், எட்டையாபுரம் விளாத்திகுளம் பகுதிகளில் 11 மில்லிமீட்டர் மழையும், தூத்துக்குடி காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மாவட்டம் முழுவதும் பரவலாக சுமார் 139.80 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழை காரணமாக மானாவாரி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் நிலவுவதால் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலை நிலவுகிறது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 24 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி