தூத்துக்குடி: ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

50பார்த்தது
தூத்துக்குடி: ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
தூத்துக்குடியில் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மற்றும் தொழில் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடியில் Shell NXplorers, மத்திய அரசின் நிதிஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சார்பில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், Shell NXplorers என்னும் திறன் மேம்பாடு, பிராப்ளம் சால்விங் ஸ்கில், கிரிட்டிக்கல் திங்கிங் என்னும் பயிற்சி நடந்தது. இதில் 19 அடல் டிங்கரிங் லேப் பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களின் மேம்பாடு மற்றும் நிகழ்வின் முக்கியத்துவம், ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க வேண்டும், அடல் ஆய்வகத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைக் குறித்தும் உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வின் மூலம் பிராப்ளம் சால்விங் ஸ்கில், கிரியேடிவ் திங்கிங் போன்ற திறன்கள் மேம்படுவதாகவும், செயல்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியசீலன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் மற்றும் Shell NXplorers குழுமத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி