தஞ்சாவூர்: சீமான் விவகாரம்..சாவல் விட்ட டிஐஜி..எச்.ராஜா கருத்து
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் போலீஸ் அதிகாரி மோதல் குறித்து கேட்டதற்கு அரசியலில் எல்லா தரப்பு மக்களும் இருக்கிறார்கள், ஒரு காவல்துறை அதிகாரி சவால் செய்வது, ஓய்வு பெற்றாலும் விடமாட்டேன் என கூறுவதும். காவல்துறையின் தரம் குறைந்து வருவதை காட்டுவதாகவும் இது கவலை அளிக்கிறது எனவும், காவல்துறை அதிகாரி வருண் இதுபோல் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் எச். ராஜா கூறினார். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எல்லாமே தோற்றுப்போன, தோல்வியின் ஒட்டுமொத்த உருவம் முதலமைச்சர் ஸ்டாலினுடைய, திராவிட மாடல் ஆட்சி என்றார். தமிழகத்தின் மொத்த கடன் தொகை எவ்வளவு என ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. வருகின்ற மார்ச் 31 வரை, ஒன்பது லட்சத்து 55 ஆயிரத்து 69 கோடி என்றும், திமுக ஆட்சி வருமுன் இருந்ததைவிட, மூன்று லட்சம் கோடி புதிதாக கடன் பெற்றுள்ளார்கள் என்றும், தமிழகத்தில் மோசமான நிதி நிலை வந்திருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சி ஒரு உதாரணம் என்றும், போதை மற்றும் அதன் காரணமாக நடைபெறுகின்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அண்ணா யுனிவர்சிட்டி ஞானசேகர் வழக்கில், விசாரணை துவங்கும் முன் போலீஸ் அதிகாரி ஒருவர் எப்படி விவரங்களை சொல்லலாம். மூன்று பெண் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், காவல்துறை அதிகாரி அருண் அவருடைய மொபைல் போன் கால்களை சோதனை செய்ய வேண்டும் என்றும் ராஜா கூறினார்.