திருவிடைமருதூர்: சிசிடிவியில் தெரிந்த விலங்கால் பொதுமக்கள் அச்சம்

61பார்த்தது
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் அருகே கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக இப்பகுதியைச் சேர்ந்த ராமநாதன் தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் சிறுத்தை நடமாட்டம் குறித்து போதுமான தடயங்கள் கிடைக்காததால் மீண்டும் காணப்பட்டால் தகவல் தெரிவியுங்கள் என இப்பகுதி மக்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 25) இரவு இப்பகுதியில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. 

இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் கால் தடங்களை ஆராய்ந்ததில் அது சிறுத்தை இல்லை எனவும், அது காட்டு பூனை என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து பொதுமக்களிடம் பயப்பட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி