
ஒரத்தநாடு மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதம்
ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டை அடுத்துள்ள தெற்குக் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40). தொழிலாளி, இவர் புதன்கிழமை இரவு, அவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் இவருடைய மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து ராஜேந்திரன் பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், யாரோ தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.