விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
இந்திய அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றிய
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பனந்தாள் கடைவீதியில் மாவட்டச் செயலாளர் முல்லைவளவன் தலைமையில் நடைபெற்றது. அமித்ஷாவை பதவி விளகக்கோரி கோசங்கள் எழுப்பினார்கள். பின்னர் அமித்ஷாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மண்டலச் செயலாளர் விவேகானந்தன், மாநில பொறுப்பாளர்கள் அரசாங்கம், அண்ணாதுரை, சிற்றரசு, உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேலானவர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி