சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பொதுமக்களின் இயல்பு

50பார்த்தது
திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.



வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா பகுதிகளான திருபுவனம், ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தநல்லூர், அணைக்கரை, கதிராமங்கலம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை பாதிப்பு ஏற்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதத்தில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி