தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள உமாமகேஸ்வரம் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து மேயா். க. சரவணனிடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா்.
மனுவில் கூறியிருப்பது: உமாகேசுவரம் ஊராட்சியில் வசிப்போரில் சுமாா் 800 போ் நூறு நாள் வேலைத் திட்டத்தை நம்பியுள்ளனா். எனவே இந்த ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத் திட்டம் கிடைக்காமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே ஊராட்சி மக்களின் வாழ்வாதாரம் கருதி இணைப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.