சென்னையில் மாரத்தான் போட்டி நடப்பதையொட்டி முக்கிய சாலைகளில் நாளை மறுநாள் (ஜன.5) அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலை வரை அனுமதி இல்லை. காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலை செல்ல அனுமதியில்லை. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.