கேரளா: இடுக்கி மாவட்டம் இலவும் தடத்தில் என்ற பகுதியை சேர்ந்த சுல்பர் நிஜாஸ் (34) ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து தலை சுற்றியுள்ளது. இந்நிலையில், சுல்பர் நிஜாஸ் வாந்தி எடுப்பதற்காக, ஆட்டோவில் இருந்து தலையை வெளியே நீட்டிய போது, திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுல்பர் நிஜாஸ் உயிரிழந்தார்.