வேலூர்: காட்பாடியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வீட்டில் உள்ள இரண்டு கதவுகளுக்கு சாவி இல்லாததால், உளி மற்றும் சுத்தியை பயன்படுத்தி கதவுகள் உடைக்கப்பட்டது. முன்னதாக, வீட்டின் சாவி இல்லாததால் அமலாக்கத்துறையினர், 6 மணி நேரமாக வீட்டிற்கு வெளியே காத்திருந்த நிலையில் பின்னர் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். இந்த நிலையில், தற்போது வேறு அறையின் கதவுகளுக்கு சாவி இல்லாததால் கதவுகள் உடைக்கப்பட்டன.