கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் தனியார் கல்லூரியில் அரபி வகுப்பு ஆசிரியராக மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஜியாவுதீன் (43)என்பவர் பணியாற்றி வந்தார்.
ஆடுதுறை பகுதியை சேர்ந்த பெண் கல்லூரியில் படிக்கும் போது அரபி வகுப்பு எடுத்த ஜியாவுதீன் அவரிடம் தகாத முறையில் பழகி அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் ஜியாவுதீன் அவரை ஏமாற்றி வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து பாதிக்கப்பட்ட பெண் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் ஜியாவுதீனை
ஆடுதுறை அனைத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் துர்கா வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். 17 வயதுடைய பெண்ணிடம் ஜியாவுதீன் தவறாக பழகியது தெரிய வந்தது.
விசாரணை செய்து தனியார் கல்லூரியின் அரபி வகுப்பு ஆசிரியர் ஜியாவுதீன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்து திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்கு நேற்று இரவு அழைத்து சென்றனர்.