அரசு பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை

57பார்த்தது
முகநூலில் அவதூறு: அரசு பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை


தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வட்டத்தில் முகநூலில் ஒரு சமூகம் குறித்து அவதூறாக பதிவிடும் ஆரலூா் அரசுப்பள்ளி ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாட்டாளி மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆட்சியரிடம் மனு கொடுத்தனா்.

இது தொடா்பாக பாமக மாவட்ட செயலா் ம. க. ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆரலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவா் முகநூலில் மற்றொரு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குறித்து அவதூறாக தகவல்களை பதிவேற்றம் செய்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை தூண்டி விடுகிறாா். இவா் மீது கல்வித் துறையும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளாா்.

அப்போது, முன்னாள் பாமக மாவட்ட செயலா் கோ. ரவிச்சந்திரன், வழக்குரைஞா் இளங்கோவன் மற்ரும் அணைக்கரை பகுதி பொதுமக்கள் இருந்தனா்.

பின்னா், கும்பகோணம் உதவி ஆட்சியா், திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆகியோரிடமும் மனுக்களை கொடுத்தனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி