தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா அருகே அணைக்கரை பகுதி வழியாக கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களின் தொடர் கனமழை எதிரொலி காரணமாக அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சேர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உள்ளதால் தண்ணீரின் வேகம் அதிகரித்து வருகிறது.
இதனால் தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி கொள்ளிடக் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, தடை செய்யப்பட்டுள்ளதாகவும், திருவிடைமருதூர் வட்டாட்சியர் பாக்யராஜ் தலைமையில் வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியும், மக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.
குறிப்பாக மகாராஜபுரம், அணைக்கரை உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுக் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.