மதுரையைச் சேர்ந்தவர் கார்த்திக் போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்த மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தை அணுகியபோது அங்கிருந்த துணை ஆணையர் ம. சரவணக்குமார் வரி பாக்கிமில் குறிப்பிட்ட தொகையை குறைக்க ரூ. 3. 50 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்தார்.
சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைப்படி கார்த்திக் ரூ. 3. 50 லட்சம் தயார் செய்து செவ்வாய் கிழமை இரவு பிபி சாவடியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
மறைந்திருந்த சிபிஐ டிஎஸ்பி கலைமணி, ஆய்வாளர் சரவணன் குழுவினர் கையோடு இருலரையும் பிடித்தனர். துணை ஆணையர் சரவணக்குமார் கூறியதன்பேரில் வாங்கியதாக இருவரும் தெரிவித்தனர். மூன்று பேரிடமும் விசாரணை செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்
துணை ஆணையர் வீட்டில் சோதனை
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு தெரு, வி. எம். பி. நகரில் துணை ஆணையர் ம. சரவணக்குமார் வீடு உள்ளது. வீட்டுக்கு புதன்கிழமை சென்ற அதிகாரிகள் வீடு பூட்டியிருப்பதை பார்த்தனர். சரவணக்குமார் பெற்றோர் வெளியூர் சென்றிருந்தவர்களை அழைத்து வீட்டில் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள், கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.