தஞ்சாவூர்: ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

56பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஏரகரம் பகுதியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்பேரில் கடந்த மூன்று மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை சுவாமிமலை சாலையில் உள்ள ஏரகரம் பாப்பாகுளம் பகுதியில் ஆக்கிரமிப்புகளில் உள்ள வீடுகளை அகற்ற அதிகாரிகள் சென்றனர். ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து துணைகோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. கீா்த்திவாசன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், 3 நாள்களுக்குள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்று வரவேண்டும் அல்லது தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி