தஞ்சை: அமெரிக்க பேராசிரியருக்கு ஸ்ரீ சீனிவாசன் ராமானுஜர் விருது

79பார்த்தது
கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 137வது பிறந்தநாளான நேற்று கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச சாஸ்த்ரா ராமானுஜன் விருது, அமெரிக்க ஜார்ஜியா தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அலெக்ஸாண்டர் டண் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கணிதவியலின் சர்வதேச உயர் விருதான 'பீல்ட்' விருதுக்கு பிறகு முக்கிய விருதாக இந்த சாஸ்த்ரா ராமானுஜன் விருது உள்ளது. 

இதுவரை இந்த விருது பெற்ற நால்வர் 'பீல்ட்' விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 32 வயதிற்கு உட்பட்ட, ராமானுஜனின் எண்ணியல் கோட்பாட்டின் சிறந்த கணிதவியல் ஆராய்ச்சியாளருக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருது பெரும் இளம் கணிதவியல் வல்லுநர் அமெரிக்கா புளோரிடா பல்கலைப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி தலைமையிலான குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த விருதானது 10000 அமெரிக்க டாலர் மற்றும் பாராட்டுப் பட்டயம் உள்ளடக்கியது. இதுவரை இந்தாண்டு விருதையும் சேர்த்து 23 கணிதவியல் ஆராய்ச்சியாளர்கள் சாஸ்த்ரா ராமானுஜன் விருது பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி