கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் தரும சரவணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மண்டல செயலாளர் ரவிச்சந்திரன், நகர நிர்வாகிகள் ஷுரிதர், மோகன், ராஜமாணிக்கம், நந்தகுமார், மாநகர செயலாளர் சரவணன், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் செந்தில் குமார், சசி, கமல் முருகேசன், ராஜா, மனோகரன், முரளி, நிர்வாகிகள் பரசுராமன், மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.